மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் திருட்டுக்கு இணையாக உள்ளன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் திருட்டுக்கு இணையாக உள்ளன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Dec 2020 8:52 AM IST (Updated: 10 Dec 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் என்பவை திருட்டுக்கு இணையாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு காணொலி நிகழ்வில் பேசும்போது, ‘இந்தியச் சூழலில், கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினம். நாம் அதீத ஜனநாயகத்தைப் பெற்றுள்ளோம். இந்நிலையில், சுரங்கம், நிலக்கரி, தொழிலாளர், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல்ரீதியான துணிவு தேவைப்படுகிறது’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘அதீதஜனநாயகம்’ என்ற ஹேஷ்டாக்கில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் என்பவை திருட்டுக்கு இணையாக உள்ளன. அதனால்தான் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை துறக்க விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story