கேரளாவில் புதிய வகை மலேரியா பரவல் தடுத்து நிறுத்தம்; சுகாதார மந்திரி அறிவிப்பு


கேரளாவில் புதிய வகை மலேரியா பரவல் தடுத்து நிறுத்தம்; சுகாதார மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 9:34 PM IST (Updated: 10 Dec 2020 9:34 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் புதிய வகை மலேரியா நோய் பரவலை கண்டறிந்து தடுத்து நிறுத்தியுள்ளோம் என சுகாதார மந்திரி சைலஜா இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்,

உலக நாடுகளுக்கு சவாலாக இருந்து வரும் கொரோனா தொற்று சீனாவின் உகான் நகரில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  இந்தியாவில் கேரளாவில் முதன்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டது.

சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவர் மற்றும் மாணவி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதன்பின்னர் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு முன்பு வரை நீண்ட நாட்களாக கொரோனா எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வந்தது.  இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்து 2வது இடத்தில் பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இருந்தபோதிலும், அதன் அருகே அமைந்த கேரளாவில் நோய் பரவல் கட்டுக்குள்ளேயே இருந்து வந்தது.  எனினும், சமீப காலங்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கேரள சுகாதார மந்திரி சைலஜா இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், கேரளாவில் ஒரு புதிய வகை மலேரியா நோய் கண்டறியப்பட்டு உள்ளது.  பிளாஸ்மோடியம் ஓவல் என்ற அந்த புதிய வகை நோய் ராணுவ வீரர் ஒருவரிடம் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  அந்த வீரர் சூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.  கேரளாவில் அந்த நோயின் பரவல் ஆனது, சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தவிர்க்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Next Story