கேரள உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் தொடங்கும் முன்பே ஓட்டு போட்ட மந்திரி காங்கிரஸ் புகார்


கேரள உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் தொடங்கும் முன்பே ஓட்டு போட்ட மந்திரி காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 11 Dec 2020 4:31 AM IST (Updated: 11 Dec 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று 2-வது கட்டமாக நடந்தது.

திருச்சூர், 

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று 2-வது கட்டமாக நடந்தது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. முன்னதாக வடக்கன்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லம்பரா வாக்குச்சாவடியில் மாநில உள்ளாட்சித்துறை மந்திரி மொய்தீன் ஓட்டுப்போட்டார்.

ஆனால் அவர் தேர்தல் தொடங்கும்முன்பே ஓட்டு போட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் அக்கரா கூறுகையில், ‘வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தான் தொடங்கியது. ஆனால் மந்திரி மொய்தீன் காலை 6.55 மணிக்கே ஓட்டு போட்டு விட்டார். இது தேர்தல் விதிமீறல். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன்’ என்று தெரிவித்தார்.

Next Story