இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்க முடிவு
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 23-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட சர்வதேச விமான சேவை ரத்து இம்மாதம் 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருநாடுகளுக்கும் இடையில் விமான சேவையை தொடங்குவது குறித்து நேபாளத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. தற்போது விமான சேவையை தொடங்குவதற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இதன்படி கொரோனா மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றி முதல் கட்டமாக இருநாட்டு தலைநகரங்களான டெல்லி - காத்மாண்டு இடையே தினசரி ஒரு விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து காத்மாண்டுவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்குகிறது. இரு நாடுகளுக்கு இடையில் இயக்கப்படும் விமானத்தில் உரிய விசா வைத்திருப்பவர்கள், இருநாட்டு குடிமக்கள், இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்திய வம்சாவளியினர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story