டெல்லி போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா


டெல்லி போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Dec 2020 9:54 AM IST (Updated: 11 Dec 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை ரத்தானது. இதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் அடைக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் டெல்லி-ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகள் நடத்தும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story