வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்க நாடு முழுவதும் கிராம கூட்டங்கள் நடத்துகிறது - பா.ஜனதா


வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்க நாடு முழுவதும் கிராம கூட்டங்கள் நடத்துகிறது - பா.ஜனதா
x
தினத்தந்தி 11 Dec 2020 11:37 PM IST (Updated: 11 Dec 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையில், 3 வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விளக்க நாடு தழுவிய நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

கிராமப்புறங்களில், விவசாயிகளுடனான சந்திப்புகளை நடத்தி, அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளது.

அத்துடன், நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story