வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரதிய கிசான் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரதிய கிசான் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் பானு பிரதாப் சிங் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தொடங்கினால் விளைபொருள்கள் அதிக அளவு வணிகமயமாக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யத் தொடங்கும்.
இதனால் உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகி பசி, பட்டினி அதிகமாகும் எனவே, விவசாயிகள் ஆணையத்தை உருவாக்கவும், அதன் தலைவர், உறுப்பினர்களை விவசாயிகளாக நியமிக்கவும், விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வகை செய்யும் வகையில் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story