ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார் ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரி முதல் அமைச்சர் குற்றச்சாட்டு


ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார் ஆளுநர் கிரண்பேடி:  புதுச்சேரி முதல் அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Dec 2020 2:28 PM IST (Updated: 12 Dec 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார் என முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறினார்.  புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார் என குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.  சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story