சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, இந்த சவாலை இந்தியா எதிர்கொள்ளும்-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்


Picture Courtesy: Youtube @FICCI India
x
Picture Courtesy: Youtube @FICCI India
தினத்தந்தி 12 Dec 2020 6:52 PM IST (Updated: 12 Dec 2020 6:52 PM IST)
t-max-icont-min-icon

சீனாவுடனான ஏழு மாத கால எல்லை மோதல் இந்தியா சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக உள்ளது. இந்த சவாலை இந்தியா எதிர்கொள்ளும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

புதுடெல்லி

இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் கூறியதாவது:

சீனாவுடனான எல்லையில் இந்தாண்டு நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் குழப்பம் விளைவிப்பதாகவே உள்ளன. இது இந்தியாவில் பொது உணர்வை கணிசமாக பாதித்துள்ளது.  கிழக்கு லடாக்கில் சீனாவுடனான ஏழு மாத கால எல்லை மோதல் இந்தியா சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக உள்ளது.  இந்த  சவாலை இந்தியா எதிர்கொள்ளும்.

இருநாடுகளும் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திய எல்லை பாதுகாப்பு உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை. ஆகையால் சீனா எல்லை அமைத்திக்கான ஒப்பந்தத்தை மீறிய நாடாகவே உலகரங்கில் கவனிக்கப்படுகிறது.

இந்திய மக்கள் சீனா மீது கொண்டுள்ள உணர்வை நான் கடந்த சில ஆண்டுகளாகவே உற்று கவனித்துவருகிறேன். அதேபோல், என் சிறு வயதிலும், இளமைப் பருவத்திலும் சீனா மீதான பார்வை இந்திய மக்கள் மத்தியில் என்னவாக இருந்தது என்பதையும் நான் உணர்வேன்.சீனாவின் நடவடிக்கைகள் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அடையாளத்துக்கு கலங்கம் விளைவிப்பதாக உள்ளது.

எல்லையில் சீனாவின் பொறுப்பற்ற போக்கு தொடருமேயானால் இருநாடுகளுக்கும் இடையே இத்தனை காலமாக உருவாக்கப்பட்ட நல்லெண்ணம் எதிர்காலத்தில் சிதைந்துவிடும் என  கூறினார்.

Next Story