இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி


Representational image
x
Representational image
தினத்தந்தி 12 Dec 2020 2:54 PM GMT (Updated: 12 Dec 2020 2:54 PM GMT)

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது என மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளது. அங்கு தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகவும் செயல்படும் தீவிரவாத முகாம் குறித்து, வீடியோ ஆதாரங்களுடன் மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

2019ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா "துல்லிய தாக்குதல்" நடத்தி, தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்தொழித்தது.

இப்போது அதே இடத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ள தீவிரவாத பயிற்சி முகாம், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர்  மவுலானா அப்துல் ரவுப் அசார் தலைமையில் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது.

Next Story