அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழிபாடு
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதம் மற்றும் லட்டு ஆகியவற்றை வழங்கினர்.
சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலுக்கு வெளிய வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கொரோனாவில் இருந்து மீண்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் பிரார்த்தனை மேற்கொண்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Related Tags :
Next Story