காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் படைகள் தாக்குதல்; இந்தியா பதிலடி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. ஹிராநகர் செக்டாரில் பன்சார் எல்லை பாதுகாவல் நிலையை ஒட்டி நேற்று இரவு 10 மணி முதல் தாக்குதல் நடைபெற்றது.
அதற்கு இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பு பரஸ்பர தாக்குதல், இன்று அதிகாலை 3.45 மணி வரை நீடித்தது. இதனால் எல்லைப்புற கிராம மக்கள், இரவை பதுங்குகுழிகளில் கழித்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியப் பகுதியில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தேக்வார் பிரிவில் இன்று மாலை 5.45 மணியளவில் இந்திய முகாம்களை நோக்கி பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இதற்கு இந்திய தரப்பில் இருந்து ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story