நாளை ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்தியாவில் எப்போது? எப்படி தெரியும்?


நாளை ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்தியாவில் எப்போது? எப்படி தெரியும்?
x
தினத்தந்தி 13 Dec 2020 10:27 PM IST (Updated: 13 Dec 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

2020-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் (14ஆம் தேதி) நாளை நிகழவுள்ளது.

புதுடெல்லி,

சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியக் கிரகணம்  ஏற்படுகிறது.  

சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நாளை (14ஆம் தேதி) இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

அதே போல சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை. இந்த முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் முழுமையாக தெரியும். சிலி, அர்ஜென்டைனா,தென்மேற்கு ஆப்ரிக்கா, அண்டார்டிகாவில் முழுமையாக தெரியும்.

சில நாட்களுக்கு முன்பு சந்திர கிரகணம் பகலில் நிகழ்ந்தது என்பதால் இந்தியாவில் தெரியவில்லை. முந்தைய சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story