டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி மனு சுப்ரீம் கோர்ட்டில் 16-ந் தேதி விசாரணை


டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி மனு சுப்ரீம் கோர்ட்டில் 16-ந் தேதி விசாரணை
x

விவசாயிகள் குவிந்துள்ளதால் கொரோனா பரவும் அபாயமும் உள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில், சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்த கடந்த மாதம் 27-ந் தேதி டெல்லி நிரங்காரி மைதானத்தை போலீஸ் ஒதுக்கிக்கொடுத்தது. ஆனால், விவசாயிகள் அங்கு செல்லாமல், டெல்லியில் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டுள்ளனர்.

டெல்லிக்கு செல்லும் சாலைகளை அவர்கள் அடைத்து வைத்திருப்பதால், மருத்துவ சிகிச்சைக்காக யாரும் டெல்லிக்கு வர முடியவில்லை. டெல்லியில் முக்கிய சாலைகளை போலீசார் மூடி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் குவிந்துள்ளதால் கொரோனா பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, விவசாயிகளை எல்லையில் இருந்து அப்புறப்படுத்தி, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்துக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மூடப்பட்ட சாலைகளை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு, வருகிற 16-ந் தேதி விசாரணைக்குவருகிறது.

Next Story