காஷ்மீர் ஏரியில் படகு கவிழ்ந்தது:பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ.க.வினர் மூழ்கினர்
காஷ்மீர் ஏரியில் படகு கவிழ்ந்தது. இதில் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ.க.வினர் மூழ்கினர்
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான தேர்தல் பிரசாரப்பணிகளை பா.ஜ.க.வினர் முன்னின்று செய்து வருகிறார்கள். இந்தநிலையில் காஷ்மீரின் தால் ஏரியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் படகில் சென்று கட்சியினர் பிரசாரம் செய்தார். கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூர் தலைமையில் நேற்று இந்த படகு பேரணி நடந்தது.
அப்போது திடீரென படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த கட்சியினரும், பத்திரிகையாளர்களும் ஏரியில் மூழ்கினர். உடனே அங்கிருந்த உள்ளூர்வாசிகள் உதவியுடன் பேரிடர் மீட்புக்குழுவினரும், போலீசாரும் அனைவரையும் உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story