தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா அரியானா மந்திரிக்கு தொடர்ந்து சிகிச்சை
அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், கடந்த மாதம் 20-ந் தேதி, ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசியை ஒரு ‘டோஸ்‘ போட்டுக்கொண்டார்.
சண்டிகர்,
அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், கடந்த மாதம் 20-ந் தேதி, ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசியை ஒரு ‘டோஸ்‘ போட்டுக்கொண்டார். தடுப்பூசியை பரிசோதித்துக் கொள்ளும் தன்னார்வலராக செயல்படும்வகையில், அவர் இதை போட்டுக்கொண்டார். அவருக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அனில் விஜ், அம்பாலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அசவுகரியமாக இருப்பதாக அவர் தெரிவித்ததால், நேற்று ரோதக் நகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு பரிசோதித்து வருகிறது.
Related Tags :
Next Story