காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 14 Dec 2020 4:18 AM IST (Updated: 14 Dec 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின.


ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. ஹிராநகர் செக்டாரில் பன்சார் எல்லை பாதுகாவல் நிலையை ஒட்டி நேற்றுமுன்தினம் இரவு 10 மணி முதல் தாக்குதல் நடைபெற்றது. 

அதற்கு இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பு பரஸ்பர தாக்குதல், நேற்று அதிகாலை 3.45 மணி வரை நீடித்தது. இதனால் எல்லைப்புற கிராம மக்கள், இரவை பதுங்குகுழிகளில் கழித்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியப் பகுதியில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story