வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 14 Dec 2020 11:26 PM IST (Updated: 14 Dec 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

வட இந்தியாவில் அடுத்த 2-3 தினங்களில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்  என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பஞ்சாப், அரியானா, சண்டிகார், ராஜஸ்தானின் வடமேற்கு பகுதிகள் ஆகிய இடங்களில் குளிர் மற்றும் மிகக் கடுமையான குளிர் வெப்ப நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட இந்திய பகுதிகளில் ஏற்கனவே, கடுமையான பனி கொட்டும் நிலையில், வெப்ப நிலை மேலும் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  நடப்பு குளிர் காலத்தில் வெப்ப நிலை இயல்பை விட மிகக் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story