பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் கவுண்ட்டவுன்- நாளை தொடங்க விஞ்ஞானிகள் திட்டம்
இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ நாளை (புதன்கிழமை) பகலில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.41 மணிக்கு வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. 44.4 மீட்டர் உயரம் கொண்டது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்.
இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ நாளை (புதன்கிழமை) பகலில் தொடங்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி நாளை மறுதினம் (17-ந்தேதி) மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
Related Tags :
Next Story