மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; ப.சிதம்பரம்
விவசாயிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு புதிய வேளாண் மசோதா கொண்டுவர வேண்டும் என ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், விவசாயிகள் போராட்டம் குறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
20 நாட்களாக விவசாயிகள் டெல்லியின் கடும் குளிரில் போராடி வரும்போதும், ‘வேளாண் சட்டங்கள் ரத்து இல்லை’ என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசு கீழிறங்கி வர வேண்டும். விவசாயிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், வேளாண் சட்டங்களை ரத்துசெய்து விட்டு, புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதுதான் எளிய வழி. எல்லோருக்கும் தெரிந்த நாடாளுமன்ற வழிமுறை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story