ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனா மருந்துகளை பரிந்துரைக்கலாமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனா மருந்துகளை பரிந்துரைக்கலாமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 1:27 AM IST (Updated: 16 Dec 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஏகேபி சத்பாவனா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று அளித்தது.

புதுடெல்லி, 

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஏகேபி சத்பாவனா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று அளித்தது.

அதில், கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, ஆயுஷ் அமைச்சகம் மார்ச் 6-ந் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனோ நோயாளிகளுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சை அளிக்கவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்யவும் அரசு அங்கீகரித்த மாத்திரைகள், மூலிகை கலவைகளை கொண்டு இந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும், கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் இவை என எதையும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தக் கூடாது.

கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள் பரிந்துரைக்கவும், கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரப்படுத்தவும் கேரள ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி விதித்த தடையுத்தரவில் தலையிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story