தெலுங்கானாவில் ஜனவரி மாதம் 2-வது வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி
தெலுங்கானாவில் வருகிற ஜனவரி மாதம் 2-வது வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
ஐதாராபாத்,
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
அதேபோல் கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு ஊசியை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தெலுங்கானாவில் வருகிற ஜனவரி மாதம் 2-வது வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக டாக்டர்கள் செவிலியர்கள் உள்பட 2 லட்சத்து 70 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் கூறினார்.
அதற்கு அடுத்த கட்டமாக முன்கள பணியாளர்கள், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனவும் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story