தப்லீக் மாநாடு கொரோனா பரவலுக்கு காரணம் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவர் விடுவிப்பு


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 16 Dec 2020 8:51 AM IST (Updated: 16 Dec 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

தப்லீக் மாநாடு இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவரை டெல்லி ஐகோர்ட் விடுவித்து உள்ளது.

புதுடெல்லி

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி நாட்டில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா இருந்தது உறுதியானது. இதனால் தப்லீக் ஜமாத் மாநாடுதான் நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் குற்றம்சாட்டப்பட்டது.

டெல்லி அரசு கொரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி,பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு குற்றம்சாட்டியது.

 டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 955 பேர் மீதும் கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என வழக்கு தொடரப்பட்டது. இதில் பெரும்பாலானோர் நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். இவர்களில் 8 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஒன்றில் மும்பை ஐகோர்ட் வெளிநாட்டவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்திருந்தது.

இதனிடையே டெல்லி ஐகோர்ட்டும்  தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற எஞ்சிய 36 வெளிநாட்டவரையும் விடுத்து உள்ளது.

ஆறு நாடுகளை சேர்ந்தஎட்டு வெளிநாட்டினரை நீதிமன்றம் விடுவித்தது,அவர்கள் மீது எந்தவொரு பதிவும் நம்பகமான தகவலும் இல்லாத நிலையில் அவர்கள்  மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


Next Story