கர்நாடகாவில் இன்று 1,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் இன்று 1,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Dec 2020 3:46 PM GMT (Updated: 2020-12-16T21:16:35+05:30)

கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,04,665 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 1,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,04,665 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,971 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,403 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,77,199 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 15,476 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story