மராட்டியத்தில் இன்று மேலும் 4,304 பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் இன்று மேலும் 4,304 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 Dec 2020 10:52 PM IST (Updated: 16 Dec 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று மேலும் 4,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்து 893 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று மாநிலத்தில் 4 ஆயிரத்து 678 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 69 ஆயிரத்து 897பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். மாநிலத்தில் தற்போது 61 ஆயிரத்து 454 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆட்கொல்லி நோய்கு புதிதாக 95 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 48 ஆயிரத்து 434 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

Next Story