அயோத்தி ராமர் கோவில் மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலமே கட்டப்படும்- அறக்கட்டளை நிர்வாகி தகவல்


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 17 Dec 2020 12:18 AM GMT (Updated: 2020-12-17T05:48:19+05:30)

அயோத்தி ராமர் கோவில் மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலமே கட்டப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அயோத்தியில் பிரமாண்டமாய் அமையும் ராமர் கோவில் நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம் தான் கட்டப்படும். இதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா, நிதி பங்களிப்பு பிரசாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ளது. மக்கள் தாங்களாக முன்வந்து வழங்கும் நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக 10, 100 மற்றும் 1,000 ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும். இதற்காக 10 ரூபாய்க்கான கூப்பன்கள் 4 கோடியும், 100 ரூபாய்க்கான கூப்பன்கள் 8 கோடியும், ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் 12 லட்சமும் அச்சிடப்பட்டு உள்ளன. இந்த நிதி பங்களிப்பு பிரசாரத்தின் போது, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் மக்களுக்கு வழங்கப்படும்.

ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது. ஏனெனில் அதற்கான எந்த ஒப்புதலையும் அறக்கட்டளை பெறவில்லை’ இவ்வாறு அவர் கூறினார்.


Next Story