எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி


எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி
x
தினத்தந்தி 18 Dec 2020 1:44 AM GMT (Updated: 2020-12-18T07:14:38+05:30)

வெளியூர் செல்வதற்கான உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் உள்ள பயணிகள், மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்சார ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிக்க செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சி.எஸ்.எம்.டி., தாதர், கல்யாண், எல்.டி.டி. போன்ற ரெயில் நிலையங்களுக்கு செல்வதில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெளியூர் செல்லும் ரெயில் பயணிகள், மின்சார ரெயில்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு, ரெயில்வேக்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து வெளியூர் செல்வதற்கான உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் உள்ள பயணிகள், மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் நீண்டதூர ரெயில் கிளம்புவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக மின்சார ரெயிலில் பயணம் செய்ய முடியும்.

இதேபோல வெளியூரில் இருந்து வரும் பயணிகளும் மின்சார ரெயிலில் பயணம் செய்து வீடுகளுக்கு செல்ல முடியும். இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story