திரிணாமுல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா


திரிணாமுல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா
x
தினத்தந்தி 18 Dec 2020 1:51 PM IST (Updated: 18 Dec 2020 1:51 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர். தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சி தலைவரும் முதல்-மந்திரியான மம்தா பானர்ஜியிடம் வழங்கினர்.

இந்நிலையில்  திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார்.  நாளை அவர் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story