இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா தொற்று


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 18 Dec 2020 6:16 PM IST (Updated: 18 Dec 2020 6:16 PM IST)
t-max-icont-min-icon

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பர்கவா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மூத்த சுகாதாரத்துறை அதிகாரி பிந்து ஷாஜன் கூறுகையில், “  மூன்று தினங்களுக்கு முன்பாக பல்ராம் பர்கவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.லேசான அறிகுறிகளே அவருக்கு தென்படுகின்றன.  நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்தார். 


Next Story