இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ - பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார் பிரதமர் மோடி
இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், 2020 ஆம் ஆண்டு குறித்த மக்களின் பார்வை குறித்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி ஒலிபரப்பாகிறது.
அதில் பேசுவதற்கு, கொரோனா பெருந்தொற்றால் சமீபத்திய வரலாற்றில் மோசமான ஆண்டாக கருதப்படும் 2020-ம் ஆண்டை பற்றி மக்களின் பார்வை மற்றும் 2021-ம் ஆண்டில் மக்களின் அதிக எதிர்பார்ப்பு எது? என்பது பற்றிய விஷயங்களை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
கருத்துகளை ‘மை கவ்’ இணையதளத்திலோ, ‘நமோ செயலி’ மூலமோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் குரல் பதிவு மூலமாகவோ அனுப்பலாம் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story