2 நாள் சுற்றுப்பயணம்: அமித் ஷா கொல்கத்தா சென்றார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று அதிகாலை ஒரு மணியளவில் கொல்கத்தா சென்றடைந்தார்
புதுடெல்லி:
மேற்கு வங்காள சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் இருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பும் விவகாரத்தில் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு முற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று அதிகாலை ஒரு மணியளவில் கொல்கத்தா சென்றடைந்தார். அவரை பா.ஜ.க தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் வரவேற்றனர்.
அவர் கொல்கத்தா வந்ததும் தனது டுவிட்டரில் "குருதேவ் தாகூர், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற பெரியவர்களின் இந்த மரியாதைக்குரிய மண்ணை நான் வணங்குகிறேன்" என்று கூறி உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் அமித்ஷா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அமித்ஷா இன்று மிட்னாபூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மந்திரி சுவேந்து ஆதிகாரி, அதோடு சில எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிருப்தி அடைந்த தலைவர்களும் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் சேரலாம்.
மத்திய, மாநில அரசு மோதல் போக்கு மற்றும் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், அமித்ஷாவின் மேற்கு வங்காள சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story