4 குளியல் அறைகள், 4 படுக்கை அறைகள் கொண்ட பிரதமர் அலுவலகம் விற்பனைக்கு விளம்பரம் செய்த 4 பேர் கைது


4 குளியல் அறைகள், 4 படுக்கை அறைகள் கொண்ட பிரதமர் அலுவலகம் விற்பனைக்கு விளம்பரம் செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2020 10:59 AM IST (Updated: 19 Dec 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

நான்கு குளியல் அறைகளை நான்கு படுக்கை அறைகள் கொண்ட வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகம் விற்பனைக்கு என்று விளம்பரப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரணாசி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு அவருக்கு என  எம்.பி.அலுவலகம் அங்குள்ள ஜவகர் நகர் காலனியில் உள்ளது.

இந்நிலையில் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பிரதமரின் இந்த அலுவலக புகைப்படத்தை பதிவேற்றிய லட்சுமிகாந்த் ஓஜா என்பவர்,6500 சதுர அடி பரப்பிலான அந்த கட்டிடத்தில் நான்கு குளியல் அறைகளை கொண்ட நான்கு படுக்கை அறைகள் இருப்பதாகவும், இது விற்பனை செய்யப்படும் என்றும், 7.5 கோடி ரூபாய் விலை என்றும் கூறியிருந்தார். 

இதுபற்றி அறிந்த போலீசார், அந்த விளம்பரத்தை அகற்றியதோடு, ஓஜா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.     


Next Story