காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை


காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை
x
தினத்தந்தி 19 Dec 2020 6:22 AM GMT (Updated: 2020-12-19T11:52:13+05:30)

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குழு கூட்டம் டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு,   தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் டெல்லியில் வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களுடனும் சோனியாகாந்தி ஆலோசனை  நடத்தி வருகிறார்.  கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர், கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story