இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அசோசம் அமைப்பின் கூட்டத்தில் தொழில்துறை வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்த்துள்ளதால் மற்ற நாடுகளுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.
கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியில் மற்ற நாடுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள்ள நிலையில், இந்தியா புதிய முதலீடுகளை அதிகரித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும்.
வரவிருக்கும் ஆண்டுகள் உலக அளவில் இந்தியா தனது இலக்கை நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், இந்தியர்களின் கனவுகளையும், அர்ப்பணிப்பையும் சோதிப்பதாக இருக்க வேண்டும்.
உலகம் மற்றொரு தொழிற்புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய இன்று முதல் நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக உற்பத்தித் துறையில் மத்திய அரசு அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்தியாவை தொழில் புரட்சியின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கு தொழில்துறையினர் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story