தேர்தல் வரும் போது மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார்: அமித்ஷா
தேர்தல் வரும் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும்தான் இருப்பார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்கம் வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
மிட்னாபூர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது: மம்தா பானர்ஜியின் மோசமான காட்டாட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு முற்றிலம் சீரழிந்து விட்டது. எதிர்க்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது.
பாஜகவில் இன்று இணைந்தவர்களை மனதார வாழ்த்து வரவேற்கிறேன். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும் தான் இருப்பார், மற்ற அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி விடுவார்கள்” என்றார்.
Related Tags :
Next Story