வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மாயாவதி வலியுறுத்தல்


வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்;  மாயாவதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2020 5:55 PM IST (Updated: 19 Dec 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 24–வது நாளை எட்டிய நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கிறது. 

அவர்கள் மீது பிடிவாதமான அணுகுமுறைக்குப் பதிலாக அனுதாப அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும். அதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையும் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story