கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந் தேதி திறப்பு
6 முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் புத்தாண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக நிபுணர் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி இருந்தனர். அதன்படி, கர்நாடகத்தில் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கி நடத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் புத்தாண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story