3 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தை எதிர்த்த விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2020 12:31 AM IST (Updated: 21 Dec 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

3 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தை எதிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல் வீசப்பட்டது தொடர்பாக, அம்மாநிலத்தின் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேற்கு வங்காள அரசு சம்மதிக்கவில்லை.

மத்திய அரசின் உத்தரவுக்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், அவர்களுக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதன் மூலம், மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு அப்பட்டமாக தலையிடுகிறது. அதே சமயத்தில், மேற்கு வங்காள மக்களுக்கு துணை நிற்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தை காக்க உறுதி பூண்டுள்ள 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 


Next Story