காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு: பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல்


காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு:  பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 21 Dec 2020 7:32 PM GMT (Updated: 21 Dec 2020 7:32 PM GMT)

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மோதிலால் வோரா (வயது 93).  ராஜஸ்தானில் கடந்த 1927ம் ஆண்டு டிசம்பர் 20ந்தேதி பிறந்த வோரா, மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக 2 முறை பதவி வகித்தவர்.

உத்தர பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்துள்ள அவர், ராஜ்ய சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த அக்டோபர் 19ந்தேதி குணமடைந்து சென்றார்.

இந்த நிலையில், கடந்த 19ந்தேதி உடல்நலம் பாதிப்படைந்து டெல்லியில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.  இதில் சிகிச்சை பலனின்றி அவர் திங்கட் கிழமை மதியம் மரணம் அடைந்து உள்ளார்.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  இதேபோன்று பா.ஜ.க. தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

Next Story