டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 1% சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தது - டெல்லி சுகாதார மந்திரி


டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 1% சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தது - டெல்லி சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 23 Dec 2020 7:55 AM GMT (Updated: 23 Dec 2020 7:55 AM GMT)

டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 1% சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில்  அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. டெல்லியில் நேற்று மேலும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,18,747 ஆக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:- 

டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை குறிப்பிட்ட வெப்ப நிலையில் சேமித்து வைப்பதற்கான பணிகள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வௌகின்றன.

மருந்துகளை சேமித்து அதனை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கொரோனா மருந்து வந்தவுடன் அதனை டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக கொண்டுசெல்ல இயலும். டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 90 உறைவிப்பான்கள் வருவதாகவும், ஏற்கனவே அதிகமான உறைவிப்பான் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story