இந்தியா- ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து; வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்


இந்தியா- ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து; வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
x
தினத்தந்தி 23 Dec 2020 4:41 PM GMT (Updated: 23 Dec 2020 4:41 PM GMT)

இந்தியா- ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,  இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு  ரத்து செய்ய்ப்பட்டதை சுட்டிக்காட்டி மத்திய அரசை சாடியிருந்தார்.  ராகுல் காந்தி வெளியிட்ட டுய்விட்டர் பதிவில், “ இந்தியாவின் மிக முக்கியமான நட்பு நாடு ரஷ்யா. நமது பாரம்பரியமான நட்புறவை சீர்குலைப்பது  குறுகிய பார்வை உடையது. நமது எதிர்காலத்திற்கும் ஆபத்தானது” என்று பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், “ கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரு நாட்டு அரசுகளிடையே எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு இதுவாகும். இந்த விவகராத்தில் ஏதேனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் அது முற்றிலும் தவறானதாகும்.  முக்கியமான உறவுகளில் தவறான  தகவல்களை  பரப்புவது பொறுப்பற்றது ஆகும்” என்றார். 


Next Story