பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: ‘காதல் கடிதங்கள் எழுதுவதை அரசு நிறுத்த வேண்டும்’ - விவசாய அமைப்பு தலைவர் அறிவுறுத்தல்


பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: ‘காதல் கடிதங்கள் எழுதுவதை அரசு நிறுத்த வேண்டும்’ - விவசாய அமைப்பு தலைவர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2020 8:54 PM GMT (Updated: 23 Dec 2020 8:54 PM GMT)

பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கும் விவகாரத்தில், காதல் கடிதங்கள் எழுதுவதை அரசு நிறுத்த வேண்டும் என்று விவசாய அமைப்பு தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் உறுதியான பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்வராஜ் அபியான் விவசாய அமைப்பு தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை விவகாரத்தில் அரசு ஒரு அடி எடுத்து வைத்தால், விவசாயிகள் 2 அடி எடுத்து வைப்போம். ஆனால் இந்த விவகாரத்தில் காதல் கடிதங்கள் எழுதுவதை அரசு நிறுத்த வேண்டும்’ என்று கூறினார். விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதையே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் அடிப்படை அதிருப்தியை கூட மத்திய அரசு புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருப்பதாக கூறிய அவர், இந்த சட்டங்களை முற்றிலுமாக திரும்பப்பெறுமாறு விவசாயிகள் கூறிவரும் வேளையில், அரசோ விவசாயிகளின் திருத்தங்களை மட்டும் புத்திசாலித்தனமாக முன்னிலைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதைப்போல மற்றொரு தலைவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளை தனது அரசியல் எதிரிகளைப்போல நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாத அமைப்புகளுடன் அரசு பேசி வருவதாகவும் அவர் குறை கூறினார்.

Next Story