தேசிய செய்திகள்

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி + "||" + India Successfully Test-fires Medium Range Surface-to air Missile Off Odisha Coast

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
பாலசோர், 

தரையில் இருந்து புறப்பட்டு சென்று வானில் உள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடிய நடுத்தர ரக அதிநவீன ஏவுகணையை (எம்.ஆர்.எஸ்.ஏ.எம்.), டி.ஆர்.டி.ஓ. என்று அழைக்கப்படுகிற இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இஸ்ரேல் விண்வெளி தொழில்நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த அதிநவீன ஏவுகணையை பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் தயாரித்து வழங்குகிறது.

இந்த அதிநவீன ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம், பாலசோரில் நேற்று நடந்தது. இந்த ஏவுகணை ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டிருந்த ஆளில்லா விண் வாகனம் ‘பான்ஷீ’யை மிக துல்லியமாக தாக்கியது. இதனால் இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரேடார்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிகோ கருவிகளால் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை சோதனைக்கு முன்னதாக பாலசோர் மாவட்ட நிர்வாகம், டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, ஏவுதளத்தில் இருந்து 2.5 கி.மீ. சுற்றளவில் வசிக்கிற சுமார் 8,100 பேரை தற்காலிகமாக வெளியேற்றி அருகில் உள்ள தங்கும் மையங்களில் தங்க வைத்தது என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 18,711 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 96-ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 18,327 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.