தேசிய செய்திகள்

உண்மைகளை திரித்து பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி தாக்கு + "||" + Modi using ‘half-truths & distorted facts’ to mislead Bengal farmers: Mamata

உண்மைகளை திரித்து பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி தாக்கு

உண்மைகளை திரித்து பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி தாக்கு
உண்மைகளை திரித்து பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள் என மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ்  சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி  மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தனது கொளகைகளால் மாநிலத்தை சீரழித்து விட்டார் என்றும், இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த 70 லட்சம் விவசாயிகள் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்

இதற்கு மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்து உளளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு பதிலாக தொலைக்காட்சியில் தோன்றி தான் அக்கறை தெரிவிக்கிறார். கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் தான் விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாக கூறினாலும், மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். இதன்மூலம் அவர் பாதி உண்மை மற்றும் திரிக்கப்பட்ட உண்மை மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.

விவசாயிகளின் நலனுக்காக எனது அரசாங்கம் மத்திய அரசுடன் எப்போதும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள தான் மறுக்கிறார்கள. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

 மோடி அரசு மேற்கு வங்காள்மாநிலத்திற்கு உதவ எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ரூ .85,000 கோடி  ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையின் ஒரு பகுதியை கூட அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அவர் உண்மையிலேயே அரசுக்கு உதவ விரும்பினால், இந்த நிதிகளில் ஒரு பகுதியையாவது அவர் விடுவிக்க வேண்டும், இதனால் நாங்கள் எங்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிரந்த வழி கிடைக்கும்.

நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், வங்காள மக்களின் நலனுக்காக, எங்கள் பங்கிற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி இன்று கோவை வருகை
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
2. பிரதமர் மோடி கோவை வருகை
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது
3. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
4. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் நடத்துவது அல்லது நவீனமயமாக்குவதே மத்திய அரசின் கொள்கை - பிரதமர் மோடி
பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் நடத்துவது அல்லது நவீனமயமாக்குவதே மத்திய அரசின் கொள்கை என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
5. தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் -மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்
தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.