தேசிய செய்திகள்

மும்பையில் அமேசான் நிறுவன குடோனை சூறையாடிய நவநிர்மாண் சேனா கட்சியினர்! + "||" + MNS demands Marathi language on Amazon app, apology to Raj Thackeray day after Pune vandalism

மும்பையில் அமேசான் நிறுவன குடோனை சூறையாடிய நவநிர்மாண் சேனா கட்சியினர்!

மும்பையில் அமேசான் நிறுவன குடோனை சூறையாடிய நவநிர்மாண் சேனா கட்சியினர்!
மும்பை மரோல் பகுதியில் உள்ள அமேசான் நிறுவன குடோனுக்குள் நேற்று முன்தினம் மதியம் 1.45 மணியளவில் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் குடோனில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மும்பை, 

அமேசான் நிறுவனத்தின் செல்போன் செயலி மற்றும் இணைய பக்கத்தில் மராட்டியை விருப்ப மொழியாக வைக்க வேண்டும் என நவநிர்மாண்சேனா கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இதை நிறைவேற்றாவிட்டால் அந்த நிறுவனத்தை மும்பையில் செயல்படவிடமாட்டோம் எனவும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நவநிர்மாண் சேனா, தொழிலாளர் சங்கத்துக்கு எதிராக அமேசான் நிறுவனம் தின்தோஷி கோர்ட்டில் முறையிட்டது. கோர்ட்டு இந்த விவகாரம் குறித்து ஜனவரி 5-ந் தேதி ஆஜராக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நவநிர்மாண் சேனா கட்சியினர் அமேசான் நிறுவன பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மும்பை மரோல் பகுதியில் உள்ள அமேசான் நிறுவன குடோனுக்குள் நேற்று முன்தினம் மதியம் 1.45 மணியளவில் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் குடோனில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். குடோனை சூறையாடியது நவநிர்மாண் சேனா கட்சியினர் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " தாக்குதலில் எல்.இ.டி. டி.வி., கண்ணாடி பொருட்கள், மடிக்கணினி, பிரின்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்து உள்ளன." என்றார்.

இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குடோனை சூறையாடியவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு; 1-ந் தேதி முதல் அமல்
மும்பை பெருநகர பகுதியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2. பிப்ரவரி 27 முதல் நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு
நெல்லை-மும்பை இடையே வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. அமேசான் நிறுவன சிஇஓ பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் விலக உள்ளதாக தகவல்
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
5. மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ; பொருட்கள் எரிந்து நாசம்
கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.