உத்தரகாண்ட் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி


உத்தரகாண்ட் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 27 Dec 2020 4:13 PM GMT (Updated: 27 Dec 2020 4:13 PM GMT)

உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் முதல் மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் இருந்து வருகிறார்.  இவருக்கு கடந்த 18ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து கொண்டார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், முதல் மந்திரி ராவத் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் இன்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

எனினும், அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் பயப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  அவரை மருத்துவமனையில் சேரும்படி நாங்களே அறிவுறுத்தினோம்.  அவருடைய உடல்நிலை பற்றி மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன் தனது அமைச்சரவையில் மந்திரி மகாராஜுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்காக கடந்த ஜூன் 1ந்தேதியும், அவரது ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளுக்காக கடந்த ஆகஸ்டு 26ந்தேதியும் மற்றும் அவரது சிறப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்காக கடந்த செப்டம்பரிலும் ராவத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Next Story