கா‌‌ஷ்மீரில் கோவிலை தாக்கும் முயற்சி முறியடிப்பு; 6 கையெறி குண்டுகள் மீட்பு


கா‌‌ஷ்மீரில் கோவிலை தாக்கும் முயற்சி முறியடிப்பு; 6 கையெறி குண்டுகள் மீட்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 7:07 PM GMT (Updated: 27 Dec 2020 7:07 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் கோவிலை தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, 

ஜம்மு கா‌‌ஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் பகுதி பாசூனிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த முஸ்தபா இக்பால், முர்தசா இக்பால் என்ற 2 சகோதரர்களை பிடித்து விசாரித்தனர்.

முஸ்தபாவின் செல்போனுக்கு ஒரு பாகிஸ்தான் எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து கேட்டபோது, ஆரி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் கையெறிகுண்டு வீச அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. கையெறிகுண்டை எப்படி வீசுவது என்று விளக்கும் ஒரு வீடியோவும் அவரது செல்போனில் இருந்தது.

அதைத் தொடர்ந்து, முஸ்தபாவின் வீட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் 6 கையெறிகுண்டுகளும், இதுவரை அறியப்படாத ஜம்மு கா‌‌ஷ்மீர் கஸ்னாவி படை என்ற தீவிரவாத இயக்கம் தொடர்பான சுவரொட்டிகளும் மீட்கப்பட்டன.

இதற்கிடையில் பாலகோட் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, தபி கிராமத்தைச் சேர்ந்த சந்தேகத்துக்கு இடமான மேலும் 2 பேர் பிடிபட்டனர். தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story