விவசாயிகளுடனான சந்திப்பை முன்னிட்டு அமித்ஷாவுடன், வேளாண் மந்திரி ஆலோசனை


விவசாயிகளுடனான சந்திப்பை முன்னிட்டு அமித்ஷாவுடன், வேளாண் மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 29 Dec 2020 7:36 PM GMT (Updated: 29 Dec 2020 7:36 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது. விஞ்ஞான் பவனில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுமார் 40 அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் மத்திய அரசு சார்பில் பங்கேற்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, இன்றைய பேச்சுவார்த்தையில் விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து இறுதி செய்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story