தேசிய செய்திகள்

பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம் + "||" + protest against farm laws in bihar

பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம்

பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம்
3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது.
பாட்னா, 

3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரின் தலைநகர் பாட்னாவில் நேற்று இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். 

அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்திற்கு அவர்கள் சென்றதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்ல அனுமதி இல்லை என்றும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் மறுத்ததால் போலீசார் அனைவரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீஸ் சுவரொட்டி: டெல்லியில் போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு
டெல்லி திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீசார் ஒட்டியுள்ள எச்சரிக்கை சுவரொட்டிகளுக்கு, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை எளிதில் வீழ்த்தியது மும்பை
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
3. ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்
ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
5. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.