தேசிய செய்திகள்

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார், பிரதமர் மோடி + "||" + PM Modi to lay foundation stone of AIIMS Rajkot today

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார், பிரதமர் மோடி

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார், பிரதமர் மோடி
குஜராத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய இணை சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வின் செளபே ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர். 

முன்னதாக ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31-ஆம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது ரூ .1,195 கோடி செலவில் கட்டப்படும், இது 2022 நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
4. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
5. குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை